இலங்கை – குவைத் விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடை நிறுத்தியது!
10 Mar,2020
இலங்கை மற்றும் குவைத்துக்கு இடையிலான அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த 6 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இவ்வாறு இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
குவைத் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தீர்மானத்துக்கமைய இந்த விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளதாகவும்,13 ஆம் திகதியின் பின்னர் வழமைபோல சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.