இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதித்தது கட்டார்
09 Mar,2020
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இலங்கை, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகைக்கு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 3827 பேர் உயிரிந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டார் ஏர்வேஸ் ஏற்கனவே இத்தாலிக்கு செல்லும் விமான சேவைகளை இடைநிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.