பயணிகள் பஸ் மோதி விபத்து – ஒருவர் பலி 20 மேற்பட்டோருக்கு காயம்
07 Feb,2020
திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (06) அதிகாலை தம்பலாகாமம் 99 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சடலம் தம்பலாகாமம் வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து சென்ற 2 பஸ்களும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் தனியார் பஸ் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயங்களுக்கு உள்ளாகியுள்ளோர் தம்பலாகாமம் மற்றும் கந்தளாய் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.