யாழில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் செல்லலாம்!
01 Feb,2020
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளை தொடக்கம் கொழும்புக்கான பயணிகள் விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் விமானம் நாளை (1) காலை 7.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இரத்மலானைக்கு தனது முதல் சேவையை தொடங்கவுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு பயணி ஒருவரிடமிருந்து ரூபா 7500 அறவிடப்படும்.இருவழி கட்டணத்துக்கு ரூபா 15000 அறவிடப்படும்.
நாளை தொடங்கவுள்ள இந்த விமானசேவையில் விமானமொன்றில் 70 பயணிகள் ஒரேநேரத்தில் பயணிக்கமுடியும் என இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ச தெரிவித்தார்.
வாரத்தில் சனி, திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இந்த விமானசேவை நடத்தப்படும்.