யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் விசேட சோதனை நடவடிக்கை!
29 Jan,2020
கொரோனா வைரைஸ் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜாசிங்க, பலாலி விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கூறினார்.
மேலும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையை பொரளையில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் மேற்கொள்ள முடியும் என்றும் இதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க11 மருத்துவமனைகள் தயாராக உள்ளன.
மேலும் வைரஸ் மேலும் பரவாமல் இருக்க சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்கும் செயற்பாடு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.