அப்பாவி ஈழத்துப்பெண்களை கற்பழிக்கும் MAG நிறுவன அதிகாரிகள்; உடனடியாக அரசாங்கம் கைது செய்யவேண்டும்!
24 Jan,2020
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பல நிறுவனங்கள் இலங்கையின் தமிழர் பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்துகொண்டிருக்கின்றன.
அந்தவகையில் மனிதாபிமான செயலில் தன்னை ஈடுபடுத்திவரும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொன்றில் மனிதாபிமானமற்ற செயல்களில் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழர் தாயகப்பகுதியில் கடந்த காலங்களில் யுத்தத்தால் பல பெண்கள் தங்கள் கணவரை, தங்கள் குடும்பத்தை இழந்த நிலையில் தனியாகவும், கணவன் இல்லாமல் பிள்ளைகளை வளர்த்தும் வருகின்றனர்.
இவர்கள் பொருளாதார வசதி இல்லாமல் சிக்கி தவித்து வருகின்ற நிலையில், பல வேலைகளுக்கு செல்கின்றனர், இப்படியான பெண்கள் சிலர்தான் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திலும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இப்படியான பெண்களைத்தான் இங்கு பிறந்து வளர்ந்த யுத்தத்திற்குள் சிக்கிவந்த, யுத்த வலியை அனுபவித்த பல ஆண்கள் இந்த கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பலவருடங்கள் பணியாற்றி தற்போது குறித்த நிறுவனத்தில் பல லட்ஷம் வருமானத்தில் உயர் பதவி வகித்து வருகின்றனர்.
இப்படியாப்பட்ட அதிகாரிகளில் சிலர் அங்கு வறுமையை வெல்ல வேலைக்கு வரும் அப்பாவி தமிழ் பெண்களை, மிரட்டி, வேலையை விட்டு துரத்தி விடுவோம் என்னோடு வா என கட்டாயப்படுத்தி கூட்டாகவும், தனியாகவும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திவருகின்றனர்.
இப்படி பல பெண்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளால் பல வருடங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர், இதனை அந்த பெண்கள் வறுமையின் காரணமாக, வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில், அவர்களின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து வெளியில் சொல்லாமல் மறைத்து வந்துள்ளனர்.
இப்படியான சூழ் நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பும் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளை, குறித்த அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பித்த அந்த பெண், அதனை தொடர்ந்து குறித்த அதிகாரிகள் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக செயல்படும் வெளிநாட்டவரிடம் முறையிட்டதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு மூன்று பேரை தற்காலிகமாக குறித்த நிறுனத்திலிருந்து நீக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.