பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லையென தாய் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
21 Jan,2020
திருட்டுக் குற்றச் சாட்டில் பொதுமக்களினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை என தாய் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபடடார் என குற்றம் சாட்டி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் பொதுமக்களினால் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இளைஞன் அரியாலை பூம்புகாரை சேர்ந்த தனது மகன் என தெரிவித்துள்ள தாயார் ஒருவர் பொலிஸாரிடம் தனது மகன் எங்கே?என கேட்டுள்ளார்.
எனினும் பொலிஸார் தாம் அவரை கைது செய்யவில்லை என மருத்துள்ளதாக பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்தார்.
எனினும் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை பொலிஸார் அழைத்து சென்றதாக சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்று சில நாட்கள் ஆகின்ற போதிலும் தனது மகனை பொலிஸார் இன்று வரை வெளியிடவில்லை என குற்றம் சட்டியுள்ளதுடன் காணாமல் போயுள்ள தனது மகனை கண்டு பிடித்து தருமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.