இராணுவத்தினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு
18 Jan,2020
இராணுவத்திலிருந்து இடைவிலகிச் சென்றவர்களுக்கு மீண்டும் இராணுவத்தில் இணைந்துக்கொள்வதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் பெப்பரவரி 5ஆம் திகதி தொடக்கம் 7 நாட்கள் வரையில் மேற்படி பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பொது மன்னிப்பு காலமானது கடந்த 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து இடைவிலகியவர்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.