தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை முடிவு
10 Jan,2020
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவா்களை விடுவிக்கவும், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 52 படகுகளை திருப்பித் தரவும் இலங்கை முடிவு செய்துள்ளது என தினமணி செய்தி கூறுகிறது.
இரண்டு நாள் பயணமாக புதுடெல்லி வந்த வெளியுறவுத்துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தன, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரை நேற்று (09) சந்தித்து கலந்துரையாடினார்.
இரு நாட்டு அமைச்சா்களும் பொருளாதார வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்து கலந்துரையாடினர்.
அப்போது இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவா்கள் விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.