கோட்டாபயவின் அதிரடி அவசர அறிவிப்பு;
27 Dec,2019
ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவோர் தொடர்பாகத் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகர் எனக் கூறிக்கொண்டு மொரட்டுவையிலுள்ள பிரபல பாடசாலையின் அதிபருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் தொடர்பில் தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.
இது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அண்மையில் சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவோர் தொடர்பாகத் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொள்கின்றது