வெளிநாட்டில் துன்புறுத்தப்பட்ட இலங்கை பெண்கள்!
24 Dec,2019
வீட்டுப் பணிப் பெண்களாக குவைத் சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த 32 பேர் இன்று நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாங்கள் பணியாற்றிய வீடுகளில் முகங்கொடுத்த துன்புறுத்தல்கள் காரணமாகவே அவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு வருவதற்கு முன்பாக அங்குள்ள இலங்கையை தூதரகத்தில் இது தொடர்பான அறிக்கையையும் இவர்கள் கையளித்துள்ளனர்.
நாடு திரும்பியுள்ள அவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முன்பு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது