மோத வேண்டாம்; எச்சரிக்கும் கருணா!

22 Dec,2019
 

 

 
காணிகளை அபகரிப்பது கள்ள உறுதிகளை முடிப்பது போன்ற படங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதனை தடுக்க எல்லா மக்களும் தமிழராக அணிதிரண்டு நிற்க வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாங்கள் தொடராக பல கூட்டங்களை நடத்தி வருகின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று தெரிந்தும் மக்கள் அவருக்கு ஆதரவு வழங்கவில்லை. நாங்கள் தீர்க்கதரிசனமாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று மேடைதோறும் சொன்னோம். குறைந்த வீதமான வாக்குகளை போடப்பட்டன.
அதற்கு என்ன காரணம் என்றால் நமது மக்களுக்கு அரசியல் ரீதியான தெளிவு குறைவு. அதை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்ன காரணம் என்றால் அன்று மகிந்த தரப்புடன் நின்றவர் அனைவரும் தமிழர்கள். சஜித் தரப்படுடன் நின்ற அனைவரும் முஸ்லிம் தலைவர்கள்.
தமிழர்களை ஓரங்கட்ட வேண்டும் கடலில் பிடித்து தள்ள வேண்டும் என்று எண்ணுகின்ற துவேஷம் பிடித்த தலைவர்கள் அனைவரும் சஜித் பிரேமதாச அவர்களுடன்தான் இருந்தார்கள். அவர்களுக்கு என்ன அநியாயம் செய்தும் காடேற்றியும் தமிழ் மக்களுக்கு ரோசம் வரவில்லை. அன்னம் இட்ட கை என்று அன்னத்திற்கு வாக்களித்தனர். இறுதியில் என்ன நடந்தது சிங்கள மக்கள் தமிழ் மக்களை காப்பாற்றி விட்டனர். சிங்கள மக்களின் வாக்குகளில் ஒரு சனாதிபதி உருவாக்கலாம் என்பதனை இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது.
இதில் சிறுபான்மை மக்களின் வாக்கு தேவையில்லை. இருந்தாலும் மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களே புறந்தள்ளவில்லை. அவர்கள் ஒருபோதும் புறக்கணிக்க போவதுமில்லை. பாரிய ஒரு ஆபத்திலிருந்து நாங்கள் தப்பித்துள்ளோம். சுனாமியை விட பத்துமடங்கு ஆபத்தான ஒன்றிலிருந்து தப்பியுள்ளோம். அத்தனை முஸ்லிம் அமைச்சர்களும் பதவி ஏற்றிருந்தால் எம்மை இருந்த இடம் தெரியாமல் ஒதுக்கி இருப்பார்கள். எனது நண்பன் அதாவுல்லாஹ் ஒரு இரவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை அபகரித்தவர்.
எல்லா மக்களும் தமிழராக அணிதிரண்டு நிற்க வேண்டும் அதுவே நமது இலக்கு. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவி ஏற்ற பின்பு கருணா அம்மான் நிச்சயம் தேர்தல் போட்டியிட வேண்டும் என்று சொன்னார். நான் சொன்னேன் உங்களுடைய கட்சியிலிருந்து நான் தேர்தலில் நிற்க மாட்டேன். ஒரு முஸ்லிமை வெற்றி பெறச் செய்ததற்காக என்னை தேர்தல் கேட்கிறீர்களா என்று கேட்டேன். நிச்சயம் போட்டியிட்டுத் தான் ஆக வேண்டும் என கூறினார். தேர்தலில் நிற்க முடியாது என்று ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினேன்.
இதில் நடந்தது என்ன, தமிழ் வேட்பாளர்களின் வாக்குகளை பெற்று ஹிஸ்புல்லாவும் அமீர் அலியையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி விட்டனர். அந்தப் பாராளுமன்றத் தேர்தலில் நான் வெளிப்படையாக அறிக்கை விட்டேன், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள் என்று. ஏனெனில் அந்த நேரம் நிலைமை அவ்வாறு இருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் எனது வீடு தேடி வந்து அந்த தேர்தலில் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். வரலாற்றில் ஒருநாள் மறக்கக்கூடாது. உடனே ஆதரவாளர்களையும் அனைவரையும் திரட்டி கூறினேன் வியாழேந்திரனை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று. அவரை வெற்றி பெறச் செய்தோம். அப்படித்தான் நாம் இருக்க வேண்டும்.
எப்போதும் நாம் தனித்துவமாக வருகின்றோம். நமக்கு அதிகாரமும் வேண்டும் உரிமையும் காப்பாற்ற வேண்டும். அவற்றுக்கு ஏற்றார்போல காய் நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். அதேபோல் தான் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இதில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள் இதையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
அம்பாரை மாவட்டம் தற்போது எழுச்சி கண்டு வருகின்றது. நான் உங்களிடம் ஒரு விடயத்தை முன் வைக்க விரும்புகின்றேன். உங்களுக்காக என் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கின்றேன். உங்கள் முன் நின்று பேசுகின்ற என் உடம்பிலும் பல விழுப்புண்கள் இருக்கின்றன. நான் இறந்து பல காலம் ஆகிவிட்டது. விட்டேன் இனி இறப்பதற்கு ஒன்றுமில்லை.
எங்களுடைய தமிழ் மக்கள் விடயத்தில் மோத வேண்டாம். உங்களுடைய நிலைப்பாட்டில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள். இல்லையேல் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். காணிகளை அபகரிப்பது கள்ள உறுதிகளை முடிப்பது போன்ற படங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies