தமிழர்களுக்காதரவாக சஜித்;
18 Dec,2019
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்கினாலும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஒழிக்க ஆதரவு வழங்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவுடன் முன்மொழியப்பட்ட மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அமையப்படுத்துவதை ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை என்றும் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த ஒப்பந்தத்தை ஒழிப்பதற்கு ஆதரவளிக்க தயார் என கூறினார்.
அந்தவகையில் குறித்த ஒப்பந்தத்தை இல்லது செய்ய நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பானமையை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அதுதான் ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய அரசாங்கம் அளித்த உறுதிமொழி என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியை ஒரு முற்போக்கான சக்தியாக வழிநடத்த தான் விரும்புவதாக தெரிவித்த சஜித் பிரேமதாச, தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நல்ல விடயங்களையும் ஆதரிக்க தயார் என கூறினார்.
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை இரத்து செய்ய இரண்டு மூன்றில் ஒரு பெரும்பான்மை தற்போதைய அரசாங்கம் விரும்புகிறது, ஆனால் குறித்த நடைமுறையை விடுத்து, இந்த அரசாங்கம் தேர்தலின்போது வழங்கிய அனைத்து உறுதிமொழிகளையும் செயற்படுத்த ஆதரவு வழங்குவோம் என தெரிவித்தார்.