வடக்கு ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸ்? – சிறிலங்கா அதிபர் வெளியிட்ட தகவல்
17 Dec,2019
வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் இன்னமும் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,
‘தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பணியாற்றுவதில் உள்ள சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பலரும், ஆளுநர் பதவிக்கான வாய்ப்பை நிராகரித்ததால் வடக்கு மாகாணத்திற்கு ஆளுநரை நியமிப்பது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது.
தற்போது, சுங்கத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர், பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அவர் இப்போது, சுகாதார அமைச்சின் செயலராக உள்ளார். அவர் இணங்கினால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
முன்னதாக நாங்கள் முத்தையா முரளிதரனை அணுகிறோம். அவர் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார்” என்றும் அவர் கூறினார்.