உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு
09 Dec,2019
பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் மற்றும் தொலைபேசி இயக்குநர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி பதில் பொலிஸ்மா அதிபருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடந்த அமர்வின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பகுதிக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அதிகாரியொருவர் கொச்சிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரியை அழைத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை விபரங்களில் மாற்றம் செய்ய பணித்ததாகவும், தினசரி தகவல் புத்தகத்தில் மாற்றம் செய்ய வலியுறுத்தியதாகவும் இலங்கையில் வெளியாகும் நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொலைநகல் தகவல்களில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் எனினும், அதை ஆணைக்குழுவிடம் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டி, அழுத்தத்தினால் அப்படி நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அனைத்து ஆவணங்ககளையும் பரிசீலித்த பின்னர் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் அந்த நிலையத்தின் தொலைபேசி இயக்குனராக பணியாற்றிய பெண் பொலிஸ் அதிகாரி ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.