சுவிஸ் தூதரக பெண் ஊழியரின் பயணத்தடை நீடிப்பு
09 Dec,2019
சுவிஸ் தூதரக பெண் ஊழியரின் பயணத்தடை உத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சுவிஸ் தூதரக பெண் ஊழியரின் வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவருக்கான பயணத்தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் நேற்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
குறித்த பெண்ணிடம் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
இதேவேளை அப்பெண், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக டிசம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னதாக நாட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு கொழும்பு முதன்மை நீதிமன்றத்தில் ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தடை உத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு மேலும் நீடித்து நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.