13வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது இதன் காரணமாக சில மாற்றங்கள் அவசியம் என இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பகுதிகளிற்கு செல்லுங்கள் ,அவர்களுடைய வாழ்வாதாரத்தினை கவனியுங்கள்,அந்த பகுதிகளில் பணியாற்றங்கள் அவர்களுடைய விவகாரங்களிற்கு தீர்வை காணுங்கள்,அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் என தமிழ் தலைவர்களிற்கு நான் தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்துஸ்தான் டைம்சின் பத்மா ராவோ சுந்தர்ஜிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
இந்தியாவிற்கான விஜயத்தின் போது எவ்வாறான எதிர்பார்ப்புகளுடன் வந்தீர்கள், இங்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற பின்னர் அதில் எத்தனை நிறைவேறியுள்ளன?
பதில்-இது மிகவும் சிறப்பானதாக விளங்கியது, குறிப்பாக இந்திய பிரதமருக்கும் எனக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் சிறப்பானதாக காணப்பட்டது.
முடிவுகள் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்திலும் அந்த அரசாங்கத்தின் இறுதிகாலத்திலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல விடயங்களில் புரிந்துணர்வின்மை நிலவியது.
இருதரப்பினர் மத்தியிலும் புரிந்துணர்வின்மை நிலவியது.
நாங்கள் தற்போது அதனை கைவிட்டுவிட்டு முன்னோக்கி நகரவேண்டும்.
இந்திய பிரதமருடன் அது சாத்தியம் என நான் நினைக்கின்றேன்.
அவர் மிகவும் யதார்த்தபூர்வமான மனிதர் என்பதை நான் உணர்ந்தேன், அவர் எங்களின் தேவைகளை புரிந்துகொள்வார், எங்கள் மத்தியிலான உறவுகளை பலப்படுத்தவேண்டும் என நேர்மையாக விரும்புகின்றோம்.,
நாங்கள் இந்தியாவின் நலனிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எதனையும் செய்ய விரும்பவில்லை என நான் எப்போதும் தெரிவித்துவந்துள்ளேன்.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படு;த்தக்கூடிய எதனையும் செய்யவிரும்பவில்லை, இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கரிசனைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் நாங்கள் ஒருபோதும் செயற்படமாட்டோம்.
,
நாங்கள் நடுநிலைமையானவர்கள் உலக நாடுகளின் போட்டிகளில் எங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை,நாங்கள் மிகவும் சிறியவர்கள் நாங்கள் அதன் நடுவில் சிக்கிக்கொள்வதற்கு விரும்பவில்லை,
மூலோபாய ரீதியில் இந்து சமுத்திரம் முக்கியமானது, முக்கியமானதாக மாறியுள்ளது,நாங்கள் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் இருக்கின்றோம்,குறிப்பாக இலங்கைக்கு அருகில் செல்லும் கடற்பாதைகள் காரணமாக அவ்வாறான நிலையில் உள்ளோம்.
இந்த அடிப்படையில் இந்து சமுத்திரம் எப்போதும் அமைதி வலயமாக விளங்கவேண்டும் என நாங்கள் தெரிவித்து வந்துள்ளோம் அதனை நாங்கள் உறுதி செய்வோம் உறுதி செய்வதற்கு உதவுவோம்.
கேள்வி-உங்களிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு கெமிஸ்ரி காணப்படுகின்றது என அவரை சந்தித்த வேளையில் நீங்கள் உணர்ந்தீர்களா? பயங்கரவாதம் குறித்து நீங்கள் சிறிதளவு சகிப்புதன்மையையும் வெளிப்படுத்துவதில்லை என்ற கருத்து காணப்படுகின்றது அது சரியானதா?
பதில்- நிச்சயமாக. ஆனால் அது பாதுகாப்பு விடயங்களில் மாத்திரமின்றி அபிவிருத்தி விடயங்களிலும் காணப்படுகின்றது. பிரதமர் மோடி இந்தியாவிற்காக நிறையவிடயங்களை செய்துள்ளார்.
அவரது அணுகுமுiறையை நாங்கள் பாராட்டுகின்றோம்,
இரண்டுபேரிற்கும் இடையிலான கெமிஸ்ரி விடயத்திலும் ஆம்( சிரி;க்கின்றார்) அது நன்றானதாக காணப்பட்டது.
கேள்வி இந்தியா மீதான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தளமாக இலங்கை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்ற என்ன உத்தரவாதத்தை உங்களால் வழங்க முடியும்?
பதில்- இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது சர்வதேசரீதியிலான விடயம், இது இலங்கைக்கோ இந்தியாவிற்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதில்லை,அது உலகலவிய ரீதியிலானதாக காணப்படுகின்றது, ஒவ்வொரு நாடும் இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் அச்சுறுத்தபடுகின்றது.
இது குறித்து விழிப்புணர்வுடன் காணப்படுவதே இதனை எதிர்கொள்வதற்கான வழிமுறையாகும், அரசாங்கம் இது குறித்து விழிப்புணர்வுடன் காணப்படவேண்டும், இதற்கு மிகுந்து முன்னுரிமை வழங்கவேண்டும்.
குறிப்பாக புலனாய்வு விடயத்திற்கு மிகுந்த முன்னுரிமை வழங்கவேண்டும், நீங்கள் உங்கள் நாட்டிற்குள் புலனாய்வாளர்களை கொண்டிருக்கவேண்டும், அதேவேளை இது சர்வதேச ரீதியிலான விவகாரம் என்பதால் நீங்கள் உங்கள் அயல்நாடுகளுடனும் ஏனைய நாடுகளுடனும் புலனாய்வு தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும்.
நீங்கள் புலனாய்வு தகவல்களை பெறுவதற்கான உங்கள் தொழில்நுட்ப திறனை அதிகரிப்பதற்காக நீங்கள் ஏனையவர்களுடன் இணைந்து பணியாற்றுவது அவசியமானது.ஏனென்றால் நீங்கள் இணையவெளியை கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டியுள்ளது, தொலைபேசி உரையாடல்களை அவதானிக்கவேண்டியுள்ளது.
விடுதலைப்புலிகளிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டோம், பல வருடங்களாக அவர்களின் பின்னணி,வரலாறு, செயற்பாடு, அவர்களது தலைவர்கள் குறித்த விபரங்கள், அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது குறித்து எங்கள் புலனாய்வு அமைப்புகளிற்கு தெரிந்திருந்ததே அதற்கு காரணம்.
ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் என்பது புதிய அச்சுறுத்தல்,ஆகவே இதனை நாங்கள் எதிர்கொள்வதற்கான திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
எங்கள் நாட்டில் எந்த விதமான பயங்கரவாதத்தையும் நாங்கள் சகித்துக்கொள்ளப்போவதில்லை.
கேள்வி ? உங்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போது,இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கைச்சாத்திட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தம் பின்பற்றப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்குகிழக்கு பகுதிக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்குவதை அது நோக்கமாக கொண்டது.
1987 ற்கு பின்னர் பல விடயங்கள் இடம்பெற்றுவிட்டன, அந்த மாகாணங்களின் இன்றைய நிலையை கருத்தில்கொண்டு 13வது திருத்தத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கவேண்டுமா?அல்லது அதனை உருவாக்கி விதத்திலேயே நடைமுறைப்படுத்த முடியுமா?
பதில்- இலங்கையின் அரசமைப்பின் 13 வது திருத்தம் நாங்கள் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது,இதன் காரணமாக மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்.
ஆனால் நாங்கள் எப்போதும் ஏன் தமிழர் பிரச்சினை என்ற அந்த விடயத்தை ஒரே கோணத்திலிருந்து பார்க்கின்றோம்?
எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து அதிகாரப்பகிர்வு குறித்தும் ஏனைய மாதிரிகள் குறித்தும் மாத்திரம் பேசிவந்துள்ளனர்.
ஆனால் இந்த மாகாணங்களின் அபிவிருத்தி குறித்த விடயங்களிற்கு – மக்களின் ஏனைய விடயங்களிற்கு தீர்வை காண்பதை தாங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்பதை அவர்கள் உணரவேண்டும்.
கல்வி அபிவிருத்தி மீன்பிடி விவசாயம் போன்றனவே அவ்வாறான விடயங்கள்,ஒட்டு மொத்த கட்டமைப்பு குறித்து கலந்துரையாடும் அதேவேளை இந்த விடயங்களிற்கு நான் தீர்வை காண விரும்புகின்றேன்.
இல்லாவிட்டால் எதனையும் சாதிக்க முடியாது,
எங்கள் முன்னைய அரசாங்கம் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தது.
ஆனால் பெரும்பான்மையினத்தவர்களின் விருப்பமின்றி உங்களால் தீர்வுகளை முன்வைக்க முடியாது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
பெரும்பான்மை சமூகத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது.இஇதுவே யதார்த்தம்.
எங்கள் அரசாங்கத்தில் உள்ள எவரையாவது நீங்கள் தமிழ் மக்களிற்கு பெரும்பான்மை சமூகத்திற்கு வழங்கப்படுகின்ற வாய்ப்புகளை வழங்கவேண்டுமா?சரியான சூழ்நிலையை வழங்கவேண்டுமா? என கேட்டால் யாரும் மறுக்கமாட்டார்கள்.
இது பிரச்சினையில்லை.
ஆனால் சுதந்திரத்தின் பின்னர் தமிழ் தலைவர்கள் ஒரு விடயத்தினை மாத்திரம் வலியுறுத்தி வருகின்றனர் அவர்களால் எதனைநோக்கியும் நகரமுடியவில்லை.
ஆகவே அவர்கள் யதார்த்தபூர்வமானவர்களாக விளங்கவேண்டும்.
தமிழ் மக்களின் பகுதிகளிற்கு செல்லுங்கள் ,அவர்களுடைய வாழ்வாதாரத்தினை கவனியுங்கள்,அந்த பகுதிகளில் பணியாற்றங்கள் அவர்களுடைய விவகாரங்களிற்கு தீர்வை காணுங்கள்,அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் என தமிழ் தலைவர்களிற்கு நான் தெரிவிக்கின்றேன்.
நான் அதனை செய்ய தயாராகவுள்ளேன்.
கேள்வி- புதுடில்லியில் உங்கள் விஜயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோவிற்கும் ஏனையவர்களிற்கும் என்ன தெரிவிக்க விரும்புகின்றீர்கள்?
பதில்-நான் தெரிவிப்பதற்கு எதுவுமில்லை.எங்கள் நாட்டின் அந்த பகுதியிலுள்ள மக்கள் குறித்து உண்மையாக அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.வடக்குகிழக்கில் உள்ள மக்கள் அமைதியாக வாழவிரும்புகின்றனர் அவர்கள் எங்கள் அரசாங்கம் தங்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என விரும்புகின்றனர்,
ஆகவே வைகோவும் ஏனைய தலைவர்களும் இந்த விடயங்களிற்கு யதார்த்தபூர்வ தீர்வை காணவேண்டும்,தடைகளை போடுவதை விட அவர்கள் உதவவேண்டும்.