கிழக்கு மாகாண ஆளுநராக தமிழ் பெண்ணா?
28 Nov,2019
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆளுநர்களின் நியமனங்கள் நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் ஆளுநர்களாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
வடக்கின் ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அதனை முத்தையா முரளிதரன் மறுத்திருந்தார்.
மேலும் கிழக்கின் ஆளுநராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான அநுராதா யஹம்பதை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவர் அந்த நியமனத்தை விரும்பாததன் காரணமாக கிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சந்திரகாந்த மஹேந்திரநாதனை நியமிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.