பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த நாட்டை விட்டு வௌியேறினார்
24 Nov,2019
பல்வேறு விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வௌியேறி சென்றுள்ளார்.
அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் பயணித்துள்ளார்.
இவர் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.