ஊழல் வழக்கில் இருந்து கோட்டபாய விடுவிப்பு: பாஸ்போட்டையும் ஒப்படைத்தது நீதிமன்றம்
21 Nov,2019
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், அவரது அப்பாவின் பெயரில் ஒரு மியூசியத்தை(அருங்காட்சியகத்தை) கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை கோட்டபாய ஆட்டையைப் போட்டார் என்று, மைத்திரி காலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு. அந்த வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருந்தது. இதனால் அவரது இலங்கை பாஸ்போட் பறி முதல் செய்யப்பட்டது. இருப்பினும் அவர் வேறு பாஸ்போட்டில் அவ்வப்போது அமெரிக்கா சென்று வந்தார்.
இன் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில், அவர் வெற்றி பெற்று இலங்கை ஜனாதிபதியாகியுள்ளார். இலங்கை சட்டதிட்டங்களின் படி, அன் நாட்டு ஜனாதிபதி மீது வழக்கு தொடர முடியாது. இதனை விசாரிக்க எந்த நீதிமன்றத்தாலும் முடியாது. எனவே இதன் காரணத்தால். குறித்த ஊழல் வழக்கை இலங்கை உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துவிட்டு. அவரது பாஸ்போட்டையும் மீளவும் கையளித்துள்ளதாக அதிர்வு இணையம் சற்று முன்னர் அறிகிறது.