கோட்டாபய வென்றதும் இந்தியாவுக்கு அழைக்கும் மோடி!
20 Nov,2019
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 29ஆம் திகதி புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நேற்று மாலை திடீர் பயணமாக கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் கலந்து கொண்டார்.
இதன்போது, அவரை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய பிரதமரின் சார்பில் நேரில் அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்டு, வரும் 29ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ச புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கோட்டாபய ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளவுள்ள முதலாவது வெளிநாட்டு பயணம் இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.