வாவியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
19 Nov,2019
மட்டக்களப்பு வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவிப் பகுதியிலிருந்து இன்று திங்கட்கிழமை (18) பெண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியூரிலிருந்து பஸ் ஒன்றில் பனிச்சங்கேணிப் பகுதிக்கு வந்திறங்கிய அந்தப் பெண் காணாமல் போயிருந்த நிலையில் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவி மருங்கிலுள்ள உல்லாச விடுதியொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி காணொளிக் கெமராவில் அந்தப் பெண் வாவியில் குதிப்பதான காட்சி பதிவாகியிருந்ததாக பிரதேச சடுதி மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.