பிரதமர் ரணில் – சஜித் தரப்பினருக்கிடையில் முறுகல்: தீர்மானம் இன்றி கூட்டம் நிறைவு!
18 Nov,2019
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச தரப்பினருக்கு இடையிலான முரண்பாடுகளை அடுத்து எந்தவித தீர்மானமும் இன்றி கூட்டம் நிறைவடைந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இந்த கூட்டம் இடம்பெற்றது.
அரசாங்கத்தை விட்டு விலகலாமா அல்லது நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லலாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக இந்த கூட்டம் கூடியது.
இருப்பினும் எவ்வித தீர்மானமும் இன்றி கூட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சு நடத்துவார் என தீர்மானித்துள்ளது.
எனவே மீண்டும் ஒருமுறை கூடி அரசைவிட்டு விலகி எதிர்கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்பதா அல்லது நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வதா என தீர்மானிக்க ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.