வாகனேரி காட்டில் கணவனின் சடலமும் வயலில் மனைவியின் சடலமும் மீட்பு!
                  
                     17 Nov,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	                                                                                                    
	மட்டக்களப்பு – வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி மானாவாரிக் கண்டம் பகுதியில் தம்பதியின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணையடி வாழைச்சேனையைச்  சேர்ந்த இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
	வாகனேரி மானாவாரிக் கண்டத்திலுள்ள வயல் வாடியில் மனைவியும் அங்குள்ள காட்டுப் பகுதியில் அவரது கணவனும் சடலமாகக் கிடைப்பதை அவதானித்த அப்பகுதியால் சென்றவர்கள் பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் சடங்களை மீட்டுள்ளனர்.
	சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் இடம்பெற்ற பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.