புலிகளின் நிதியியை தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தும் கோத்தாபய - ராஜித
10 Nov,2019
விடுதலை புலிகளின் நிதியையே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் கோத்தாபய வெற்றி பெற்றால் மீண்டும் கொலை மற்றும் வெள்ளை வேன் கலாச்சாரம் உருவாகும். இந்நிலையில் நாட்டு மக்கள் அச்சத்தில் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ராஜபக்ஷர்கள் குடும்பத்தினர் மீது தனக்கு தனிபட்ட முரண்பாடுகள் இல்லை எனவும் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பணிபுரிந்த போது இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மோசடிகள் குறித்து இனிவரும் காலங்களில் துரித விசாரணை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
கிருலபனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது வெள்ளை வேன் கடத்தல் செயற்பாடுகளின் போது சாரதியாக செயற்பட்டதாக குறிப்பிட்டு அந்தனி டக்லஷ் பெர்னாண்டோ என்ற நபரும் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட அத்துல சஞ்சீவ மதநாயக்க ஆகிய இருவரும் ஊடக சந்திப்பில் தமது கருத்தை தெரிவித்தனர்.
இதன்போது அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு கூறினார்.