இலங்கையில் கோர விபத்து! 30 பேர் படுகாயம்
                  
                     05 Nov,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	தனியார் பேருந்தொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
	 
	வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் குடாஓய, அலிவங்குவ என்ற பிரதேசத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
	 
	இந்த சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
	 
	காயமடைந்தவர்களுள் இரண்டு பிக்குகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
	 
	இவர்கள் தனமல்வில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
	 
	அத்துடன் கவலைக்கிடமாக உள்ள ஏழு பேர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.