மடகஸ்கரில் 3 இலங்கையர் பலி
02 Nov,2019
நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக மடகஸ்கர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் பயணித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த மூவரின் உடல்களையும் மீட்ட மடகஸ்கர் பொலிஸார் அவற்றை மடகஸ்கர் வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடகஸ்கர் மேற்கொண்டள்ளமை குறிப்பிடத்தக்கது.