யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை கட்டணம் எவ்வளவு? வெளியான தகவல்!
                  
                     25 Oct,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்களுக்கும் இலங்கைத் தரப்பினருக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.
	யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் கடந்த 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட நிலையில் நவம்பர் முற்பகுதியில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
	இந்நிலையில் விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் பேச்சை நடத்தி வருகின்றன.
	இந்நிலையில் விமான சேவை நிறுனங்கள் பயணச் சேவைக் கட்டணத்தை குறைப்பதற்கு விமான நிலைய வரியைக் குறைக்குமாறு கோரியுள்ளன.
	கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரின் விமான சேவைக்கட்டணத்துடன் 60 டொலர் விமானநிலைய வரி அறிவிடுகின்றது.
	இதேயளவு விமான நிலைய வரியை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணியிடம் அறவிட்டால் விமான சேவைக் கட்டணத்தைக் குறைந்த விலையில் வழங்க முடியுமெனத் தெரிவித்துள்ளதகத் தெரிவிக்கப்படுகின்றது.
	இதன்பிரகாரம் விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லையெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
	இதேவேளை கட்டுநாயக்க போல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகள் இல்லாதநிதிலையில் 60 டொலர் விமான நிலைய வரியை அறவிடுவது நியாயமற்றதென யாழ்.வர்த்தகத் தரப்பினர் தெரிவித்தனர்.
	இதேவேளை திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்படுகிறது.
	கடந்த வியாழக்கிழமை சென்னையில் இருந்து முதல் விமானம் யாழ்ப்பாணத்துக்குப் பயணத்தை மேற்கொண்டது. இதன் போது திருச்சியில் உள்ள கட்டுப்பாட்டு அறையே அந்த விமானத்தைக் கண்காணித்தது.
	“திருச்சி விமான கட்டுப்பாட்டு அறை யாழ்ப்பாணத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.
	இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அடுத்த கட்டமாக, யாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன.