விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சி – கிளி.யில் ஒருவர் கைது
14 Oct,2019
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்து கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமையா விவேகானந்தன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளி மற்றும் ஒட்டுசுட்டான் பகுதியில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் இரு அரசியல்வாதிகள் உட்பட 12 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.