தேவாலயங்களில் மேப்பநாய் சகிதம் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கை
08 Oct,2019
வவுனியாவில் உள்ள தேவாலயங்களுக்குள் காலை மோப்பநாய் சகிதம் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இலங்கையில் உள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் இரு மாதங்களின் பின் வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் சில நாட்களாக வவுனியாவில் பாதுகாப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் காலை வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மோப்பநாய் சகிதம் சென்ற பொலிஸார் ஆலய வளாகங்களை பரிசோதனை செய்திருந்தனர்.
இதேவேளை அண்மையில் யாழ் உட்பட பல பகுதிகளில் வெடிமருந்துகள், ஆயுதங்கள் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.