ஐதேகவுக்கு ஆதரவளிக்க மைத்திரி இணக்கம்
03 Oct,2019
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி பேச்சுக்கள் தோல்வியடைந்தால், சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தியுள்ள ஜனநாயக தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐதேகவின் மூத்த தலைவர்களை நேற்றிரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த உறுதிமொழியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒக்ரோபர் 5ஆம் நாள் நடக்கவுள்ள சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், பொதுஜன பெரமுன கூட்டணியில் இணைந்து கொள்வதற்கான இணக்கப்பாடு ஏற்படாவிடின், ஐதேக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு சிறிலங்கா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவுடன் வரும் 5ஆம் நாள் இணக்கப்பாடு ஏற்படாவிடின், ஐதேகவுடன் 6ஆம் நாள் மற்றொரு சுற்று பேச்சுக்களை நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் சஜித் பிரேமதாச, அகில விராஜ் காரியவசம், கபீர் காசிம் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.