ஸ்ரீலங்காவில் காடுகளுக்குள் யானைகளின் உடல் தீவிர தேடுதலில் இராணுவம்; !
01 Oct,2019
ஹபரணை- தும்பிகுளம் வனப்பகுதியில் திடீர் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மாலை இராணுவம், பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வனப் பகுதியில் இதுவரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையிலேயே நேற்றைய தினம் இது தொடர்பான தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேடுதல் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படலாமெனவும் சிகிரிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது