வீட்டிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ; கடும் போராட்டத்திற்கு மத்தியில் விரட்டியடிப்பு
01 Oct,2019
வீட்டின் உட்கூரையில் வீட்டாருக்குத் தெரியாமல் பதுங்கியிருந்த கொடுப்புலி ஒன்று வெளியேற்றப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று ஓட்டமாவடி – மீராவோடையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் வீடொன்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீட்டின் உட்கூரையில் வித்தியாசமான உயிரினம் ஒன்றை கண்டு பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
உடனே பெற்றோர்கள் கூரையில் பதுங்கியிருந்த கொடுப்புலியினை கடும் போராட்டத்திக்கு மத்தியில் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
குறித்த பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவது போன்று கொடுப்புலிகளின் வருகை அதிகரிக்குமோ என்ற அச்சம் தோன்றுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.