இலங்கை இறைமையுள்ள நாடு, எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது – 
                  
                     26 Sep,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு, எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
	இலங்கை படையினரின் குடும்பத்தினர் மத்தியில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
	இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கை படையினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று, மனித உரிமை மீறல்களை புரிந்ததாக குற்றம்சாட்ட முயற்சிகள் நடக்கின்றன.
	அது நடப்பதற்கு பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாட்டைப் பிளவுபடுத்த எவரையும் அனுமதிக்கமாட்டேன்.
	பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கின்றது.
	புதிய இராணுவத் தளபதி நியமனத்துக்கு சில மேற்குலக நாடுகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.