மரண வீட்டுக்குச் சென்று திரும்பிய பஸ் விபத்தில் சிக்கியதில் 18 பேர் காயம்
25 Sep,2019
மரண வீட்டுக்குச் சென்று திரும்பிய பஸ் விபத்தில் சிக்கியதில் 18 பேர் காயம்
மரண வீட்டுக்குச் சென்று வந்த பஸ் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பதினெட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரண வீட்டுக்குச் சென்று திரும்பிய பஸ் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதிலேயே இவ்வாறு பதினெட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அக்கோபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு அக்போபுர கித்துள் ஊற்றுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கந்தளாயில் இருந்து நாவலப்பிட்டி பகுதிக்கு உறவினர்கள் சகிதம் மரண வீடு ஒன்றிக்குச் சென்றுவிட்டு கந்தளாய்க்கு சென்ற வேலையில் விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.