வெளிநாட்டு மோகத்தால் இலங்கையில் 63 லட்ஷத்தை இழந்த தமிழ் இளைஞன்;
08 Sep,2019
ஐரோப்பிய நாடொன்றிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த தமிழ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் டுபாய் செல்வதற்காக காத்திருந்த வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் ஆவணங்களை பரிசோதனை செய்துக்கொண்டிருந்த வேளையில் காணா அரசாங்கத்தில் பணி புரிவதற்கான வீசா ஒன்றினை வைத்திருந்தமையை தொடர்ந்து சோதனைக்குட்படுத்தப்பட்டபோதே அவர் சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவிற்கு செல்லவிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர் தனது விமான பயணச்சீட்டுக்களுக்காக மூன்று லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். இதுவரை இவர் ஜரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயற்சித்து விமான பயணங்களுக்காக 63 இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காக கடவுச்சீட்டுடன் விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான தமிழ் இளைஞன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது