கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு!
                  
                     29 Aug,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
	திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
	இதன்போது வழக்கு தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது.
	இதனைத் தொடர்ந்து கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
	குறித்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும், எதிர் மனுதாரர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
	இதேவேளை, குறித்த வழக்கினை கடந்த ஜூலை மாதம் 19ம் திகதி திருகோணமலை சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது