குகதாசன் என்னும் ஜேர்மன் பிரஜை ஒருவரை இலங்கை தேடுகிறது ?
27 Aug,2019
குகதாசன் சிவராஜா என்னும் ஜேர்மன் வாழ் பிரஜை ஒருவரை, இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தேடிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கையில் உள்ள நீதித்துறைக்கு அவமானம் ஏற்படும் விதத்தில் செய்திகளை பிரசுரித்தார் என்றும். சட்டவிரோதமான இணையம் ஒன்றை இவர், சேது ரூபனோடு இணைந்து நடத்தி வந்தார் என்றும் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதோடு.
சேது ரூபன் என்பவர் போலியான இணையத்தை நடத்த இவரது பெயரையே பயன்படுத்தி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும். இவர்கள் இருவரும் இணைந்தே கப்பம் பெற்று மக்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படும் நிலையில்.
சேது ரூபனின் அடியாளாக இந்த குகதாசன் செயல்பட்டுள்ளதாக யாழ் ஊடகவியலாளர்கள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.
சர்வதேச பிடியாணை ஒன்றை பிறப்பிப்பது தொடர்பாக இலங்கை, நீதித்துறையினர் ஆராய்ந்தும் வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.