கோட்டா ஜனாதிபதியானால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படும்- உறவுகள்
                  
                     26 Aug,2019
                  
                  
                     
					  
                     
						
	
	 
	 
	ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படலாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
	மேலும் தங்களின் அவல நிலைக்கு அவரே காரணமென்றும் எனவே அவர் ஜனாதிபதியாக வருவதை ஒருபோதும் தாம் விரும்பவில்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
	கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, எதிர்கால ஜனாதிபதி  வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவின் நியமனம் குறித்து  ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
	மேலும் தெரிவித்த அவர்கள், “எங்களது உறவுகளை தொலைத்தவர்கள்  பட்டியலில் மிக முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவே. இவரால்தான் தற்போதுவரை   நாங்கள் தெருத்தெருவாய் அலைந்து திரிகிறோம். அவரே  இதற்கு முக்கிய சாட்சியம் கூற வேண்டும்.
	ஜனாதிபதியாக அவர்  வந்தால், மீண்டும் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டலாம் மீண்டும் ஒரு இன அழிப்பு ஏற்படலாம்” என மேலும் தெரிவித்தனர்.