குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்க உக்ரைன் திட்டம் 
                  
                     24 Aug,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	
	உக்ரைன் நாட்டின்  ஸ்கைப் அப் எயார் லைன்சுக்கு சொந்தமான விமான சேவையை குறைந்த கட்டன விமான சேவையாக உக்ரைனின் தலைநகரில் இருந்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க  திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
	உக்ரைனின் தலைநகரான கெய்விலிருந்து வழக்கமான  விமானசேவைகளுக்கு அமைவாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா சேவைகளுக்கு ஸ்கை அப் ஏர்லைன்ஸ் தனது கட்டணத்தை குறைத்துள்ளதாக விண்ணப்பம் ஒன்றை  உக்ரைன் மாநில விமான நிர்வாகத்திடம்  சம்ர்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
	அத்தோடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஸ்கை அப் எயார்லைன்ஸ் நிறுவனம் அனுமதியினை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.