இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்
20 Aug,2019
இராணுவத்தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தளபதி மஹேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்படுவதற்கு பல எதிர்ப்புக்கள் வந்திருந்த போதிலும் அவற்றை புறந்தள்ளி குறித்த நியமனத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.