பயணிகள் சோதனை – வடக்கில் நீடிப்பு!!
13 Aug,2019
உயிர்த்தஞாயிறு தினத் தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் சோதனை நடவடிக்கைகள் வடமாகாணத்தில் தற்போதும் தொடர்கின்றன – என்று அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வடக்கில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருந்தது. முதன்மை வீதிகள், சந்திகள் அனைத்திலும் சாலை மறியல் சோதனைகள், திடீர் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.
வாகனங்கள் அனைத்தும் வழிமறிக்கப்பட்டு மக்கள் இறக்கி ஏற்றப்பட்டனர். தாக்கு தல் இடம்பெற்றதன் பிற்பாடு நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனைகள் தளர்த்தப்பட்ட போதிலும்,, வடமாகாணத்தில் பல இடங்களில் பயணிகள் சோதனைகள் தொடர்ந்துகொண்டே உள்ளன. இதையடுத்தே மேற்படி நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.