கோட்டாபய பதவிக்கு வந்தால் ஹிட்லர் ஆட்சியைக் காண முடியும்- விஜித
12 Aug,2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஹிட்லர் ஆட்சியைக் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளமையினால் சிறுப்பான்மையினர் இடத்தில் தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதாவது கோட்டாபய, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றால் வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் நாட்டுக்குள் தலையெடுக்கும். அதேபோன்று ஊடகங்களும் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலைமை ஏற்படும்.
அதாவது ஹிட்டலர் ஆட்சியை கோட்டாவின் ஆட்சியில் நாம் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
ஆகையால் கோட்டாவை தோற்கடிக்க கூடிய ஒரு மாற்று வேட்பாளர் எமது கட்சியிலேயே உள்ளார். ஆகையால் எமது கட்சிக்கு ஐ.தே.க.வும் ஆதரவு வழங்க வேண்டும்” என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.