கண்டி வீதியில் கோர விபத்து ; இரு பெண்கள் உட்பட மூவர் பலி, இருவர் படுகாயம்
08 Aug,2019
கண்டி - கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டி - கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவ பகுதியிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில் தனியார் பஸ் ஒன்று கெப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.