தாய்லாந்திலிருந்து சென்ற இலங்கையர் 9 பேர் கட்டுநாயக்கவில் கைது!
                  
                     04 Aug,2019
                  
                  
                     
					  
                     
						
	
	 
	 சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க ஆபரணங்களை கொண்டு வர முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
	இவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
	தாய்லாந்து தலைசகர் பாங்காக் நகரிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த இரண்டு விமானங்களில் இந்த சட்டவிரோத தங்க ஆபரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
	சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் நான்கு கிலோகிராம் எடையுடைய ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
	அவர்களிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்