சுட்டு கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் : இந்திய ராணுவம்
                  
                     04 Aug,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	எமது கொள்கை பயங்கரவாதிகளை அடக்குவதல்ல. அவர்களை முற்றாக அழிப்பதென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “நவீன காலத்திலுள்ள தீவிரவாத இயக்கம் விடுதலை புலிகள் அமைப்பை போன்றதல்ல
	நவீன தீவிரவாதத்தை கடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் ஊடாக அனைவரும் அறிந்திப்போம். தற்போதுள்ள பயங்கரவாதத்தை தனி மனிதனால் கூட மேற்கொள்ள முடியும்.
	ஆகையால் முதலில் நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் இந்த நவீன காலத்திலுள்ள தீவிரவாத இயக்கத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.
	நான் ஒன்றினை கேட்க விரும்புகின்றேன். குண்டு வெடிப்பை மேற்கொள்ள முனையும் தீவிரவாதி, அதனை இயக்க முடியாமல் கையில் சிக்கிக்கொள்ளும்போது அவருக்கு வாழ் நாள் ழுழுவதும் சிறைத் தண்டனையை வழங்குவதா? அல்லது மரணத் தண்டனையை வழங்குவதா?
	இவ்விடயத்தில் நான் என்ன நினைக்கின்றேன் என்று அனைவருக்கும் தெரியும். கொடூரமான குண்டுத் தாக்குதலை நேரடியாக பார்த்தப்பின்னரும் அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது சாத்தியமா?
	என்னை பொறுத்தவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சிறைத்தண்டனைக்கு அப்பால் தண்டிக்கப்பட வேண்டும்” என சஜித் தெரிவித்துள்ளார்.