நந்திகடலை நோக்கி படையெடுக்கும் "பிளமிங்கோ பறவைகள் !
                  
                     01 Aug,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	வலசை பறவையான பிளமிங்கோ எனப்படும் பூநாரைகளின் வருகை முல்லைத்தீவு நந்திக்கடல் கடல்நீரேரியில் அதிகரித்துள்ளது .
	இயற்கையான கண்டல் தாவர சூழலை கொண்டமைந்த இடமாக நந்திக்கடல் நீரேரி காணப்படுவதால் இந்தச்சூழல் பறவைகள் இரைதேடவும் தங்கிச்செல்லவும் வாய்ப்பாக இருப்பதால் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பறவை இனங்கள்  தற்போது இங்குவந்து சேர்கின்றன.
	அந்த வகையில்  பிளமிங்கோ எனப்படும் பூநாரைகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனால் பறவை ஆய்வாளர்களின் கவனமும் சுற்றுலாப் பயணிகளின் கவனமும்  இந்த நந்திக்கடல் நீரேரிக்கு வருகின்ற வலசைப்பறவைகள் மீது இப்போது திரும்ப ஆரம்பித்துள்ளது.
	பூமியின் வடக்குப்பகுதியில் பனிபடிய ஆரம்பிக்கும்போது அப்பிரதேசங்களில் வாழுகின்ற பறவைகள் இரைதேடுவதற்காக வெப்பப்பிரதேசங்களை நோக்கி கூட்டம் கூட்டமாக குடிபெயர்கின்றன. குளிர்விலகும் போது தங்கள் சொந்த இடங்களுக்கு பாதை தவறாமல் திரும்பிச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.