கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் விமானப்படை அதிகாரி தற்கொலை!
01 Aug,2019
கொழும்பு 3, தோர்ஸ்டன் வீதியில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து தூதவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், தென்னிலங்கையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.