இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈழத்து தமிழ் பெண் கைது!
30 Jul,2019
இங்கிலாந்து நோக்கி பயணிக்க முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் போலியான வீசா அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி இங்கிலாந்து செல்ல முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண் லண்டன் நோக்கி பயணிக்க இருந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பயணிக்க முயற்சித்துள்ள நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.