வேனைக் கடத்திச் சென்ற கொள்ளையர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு
29 Jul,2019
கொட்டாவ , மத்தேகொட பகுதியில் திருடப்பட்ட வேன் ஒன்றை ஜீ பீ எஸ் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்த இராணுவத்தினர் குறித்த வேனை பாணந்துறை - பின்னவத்தைக்கிடைப்பட்ட பகுதியில் வழிமறித்தனர்.
இதன் போது குறித்த கொள்ளையர்கள் வேனை நிறுத்தாமல் சென்றதால் இராணுவனர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்தவேனில் சென்ற கொள்ளையர் ஒருவர் காயமடைந்த நிலையில் மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து குறித்த கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது